History

 குடும்ப வரலாறு

தொகுப்பு: M.I.M றிஸ்வான்


எமது மூத்த வாப்பா J.P மஹ்மூத் அவர்களின் வம்சத்தைச் சேர்ந்த மர்ஹும் டாக்டர் ஜெமில் (சின்ன ஜமீல்) அவர்களால் எழுதப்பட்ட "வம்ச வரலாறு" எனும் எமது வம்ச வரலாறு மற்றும் உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய 208 பக்கங்கள் அடங்கிய நூலின் தொகுப்பின் அடிப்படையில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இருந்து கஜபாகு, நிசங்க போன்ற சிங்கள மன்னர்களின் அரச வைத்தியர்களாக கடமை புரிந்து வந்த குடும்பத்தில் 1851 இல் பிறந்த முஹல்லம் ஆதம் லெவ்வை என்பவர் கொடிகமுவ எனும் ஊரில் பிறந்தார்.

                                         (Front page of genealogy book & Marhoom Muhallam Ahammed Lebbai )

சன்மார்க்க கல்வியை கற்ற இவர் சாய்ந்தமருதில் ஆமினா என்பவரை திருமணம் முடித்தார் பிறகு 1941  வரை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் தலைமை இமாமாகவும் கடமையாற்றி 1956 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார் இவரின் 9   பிள்ளைகள் மூலம் 7 தலைமுறைகள் கடந்து இன்று சாய்ந்தமருதில் 2500 க்கும் மேற்பட்ட அளவைக் கொண்ட வம்சம் பெருகி உள்ளது.

(Family members photo on the genealogy book)
                                                             


இதில் டாக்டர் மர்ஹும் டாக்டர் ஜமீல், முன்னாள் மஹ்மூத் கல்லூரி அதிபர் பஷீர், சட்டத்தரணி அசிஸ், முன்னாள் கல்வி பணிப்பாளர் இஸ்ஸதீன் போன்ற பலரின் குடும்பங்களும் இந்த வம்சத்தில் அடங்குவர்.


                          (Marhoom JP Mahmood & Marhoom Rawiyathummah)

முஹல்லம் ஆதம் லெபையின் இரண்டாவது  புதல்வியான வல்கீஸ் அவர்களின் ஆறாவது புதல்வராக எமது மூத்தவாப்பா மர்ஹும் J.P மஹ்மூத் அவர்கள் காணப்படுகிறார்.


நீண்ட காலமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவர் 97 வயதில் 2009 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

அவரது பாரியாரான றாவியத் உம்மா அவர்கள் 2006 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

இவர்களின் நான்கு பெண் பிள்ளைகள், இரண்டு ஆண் பிள்ளைகள் மூலம் நான்கு தலைமுறைகள் கடந்து இன்று 75 க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.

மேலும் அஹமட்லெவ்வை, சுவுறா உம்மாஹ் குடும்பம் ஆனது

எமது உம்மம்மா றாவியத்தும்மாஹ் அவர்களின் சகோதரியான மர்ஹும்  சவுறா உம்மாஹ் அவர்களின் குடும்பம் மிக நீண்ட காலமாக எமது குடும்பத்தோடு இன்ப, துன்பங்களில் நெருக்கமாக இருந்ததன் அடிப்படையில் ஒரே குடும்ப உறவாகவே நாங்கள் காணப்படுகிறோம்.

அவ்வகையில் மர்ஹூம் அஹமட்லெவ்வை அவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபாவின் சொந்த தாய்மாமா ஆவார்.


                          (Marhoom Sawrah Ummah & Marhoom Ahamed Lebbe)

இவர்களின் இரண்டு ஆண் பிள்ளைகள், மற்றும் ஒரு பெண் பிள்ளை மூலம் 20 க்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் காணப்படுகிறார்.

அத்தோடு  கல்முனையில் மிக நீண்ட காலமாக நஜீமா ஜுவல்லர்ஸ் மற்றும் சிட்டி ஜுவல்ஸ் என்ற பெயரில் இயங்கி வரும், மேலும் அலிஸரா ஜூவல்ஸ் எனும் கிளை நிறுவனத்தை கொண்ட நகைக்கடைகளின் உரிமையாளர் அலாவுதீன் அவர்கள் இவர்களின் மருமகன் ஆவார்.

கடந்த 2019 ம் ஆண்டு அஹமட்லெவ்வை அவர்களும்,கடந்த 2021 ம் ஆண்டு சவுறா உம்மாஹ் அவர்களும் இறையடி சேர்ந்தார்கள்.

இந்த வரலாற்று தொகுப்பின் முக்கிய நோக்கம் புதிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினர் குடும்ப வரலாற்றை அறிந்து கொள்வதும்,  குடும்ப உறுப்பினர்கள் மற்றவர்களை அறிந்து  ஒற்றுமையாக இருப்பதும், மரணித்த உறவுகளுக்காக துஆ செய்வதும் ஆகும்.


(01. Marhoom Musthafa 02.Marhoom Rawiyathummah 03. Marhoom JP Mahmood 04. Marhoom M.AJabbar)

யா அல்லாஹ் மரணித்து உறவுகளின் பாவங்களை மன்னித்து அருள்வாயாக..

M.I.M Riswan

No comments:

Post a Comment